பணம்

பணம் ,
மனிதனை மரணபடுக்கைக்கு
கொண்டு செல்லும்
இனிப்பு பாயசம் !

ஆசைகள் தேவைதான் ,
அதற்காக பேராசைகளை
நியாயப்படுத்தமுடியமா !

இருப்பவனும் நிம்மதியாய் இல்லை ,
இழந்தவனும் நிம்மதியாய் இல்லை ,
நிலையற்ற பணத்திற்கு,
நிம்மதியை தினம் தினம்
செலவிட்டுக்கொண்டிருக்கிறான் !

இருப்பது போதாதென்று
இன்னும் அலைகிறான் ,
இரவிலே தூக்கத்தை துளைத்துவிட்டு ,
பகலிலே கனவுகான்கிறான் ,
வட்டியை வாங்கி வங்கியில்
செலுத்திவிட்டு ,
கோவிலுக்கு போகிறான்
புண்ணியம் தேட !

ஒரு வேலை சோத்துக்கு
ஓராயிரம் கொடுக்கிறான் ,
இல்லாத ஏழை ,
கஞ்சிக்கு காசு கேட்டால் ,
கஞ்சத்தனம் போடுறான் !

வாரிகொடுத்த வள்ளல்கள்
எல்லாம் வரலாற்று கதைகளோடு
நீதியில்லை இன்றைய உலகில்
எல்லாம் பணம் படுத்தும் பாடய்யா !

கூட பிறந்த
அண்ணன் கூட
காசுக்காக தம்பியாகிறான் ,
காசு கேட்டால் அப்பன் கூட
உறவை தூக்கி ஒதுக்குகிறான் !

இறக்கம் கொண்டவனுக்கு
உலகம் இல்லை ,
ரொக்கம் மட்டுமே
நாட்டை ஆள்கிறது ,
ஆசைகள் கொடுக்க ஆளுண்டு ,
அன்பை போதிக்க ஆளில்லை !

இயந்திரத்தையும் மிஞ்சினான் ,
இதயத்தை கல்லாக்கிவிட்டன் ,
மனசாட்சியை மறந்துவிட்டான் ,
நீதி நேர்மையை
பொடிப் பொடியாக்கிவிட்டான்,
பணமூடையை சம்பாதிக்க
பாவமூட்டைகளையும் சேர்த்தே
சம்பாதிக்கிறான் !

ஊரார் ,
சொந்த பந்தங்கள்,
எல்லாம் எடைபோட்டு பார்க்கும் ,
பணமிருந்தால் பாசம் கொட்டும்
இல்லாவிட்டால்
தூரம் தள்ளி ஓரம் கட்டும் !

மேடு ,பள்ளம்
பசுமை, பாலைவனம்
இரவு , பகல் ,
என இயற்கையின் படைப்புகளை
சராசரிபடுத்தும் மனிதன் ,
மனிதனை மட்டும்
ஏன் பணத்தால் ,
பலப்படுத்தப்படுகிறான் ,
பலவீனபடுத்தபடுகிறான் ,
ஆயிரம் தான்
கடல் பறந்து விரிந்து கிடந்தாலும் ,
புனித நீர் கொண்டிருக்கும் குலத்தை
குறைத்து மதிப்பிடமிடியுமா !

வாழ்க்கை முழுவதும்
ஓடி ஓடி சம்பாதித்தவன் ,
இறுதியாக ஓய்ந்துபோகும் நாளில் ,
பணம் என்ன
பட்டாளம் போட்டுக்கொண்டு
கூடவே வரும் ,
அங்கே எடை போடப்படுவது ,
அவன் சம்பாதித்த செல்வமில்லை ,
சேர்த்துவைத்த பாவமும் புன்னியமும்தான் !

இன்றைய உலகின்
ஒவ்வொரு நொடியும்
பணத்தில் தான் பயணிக்கிறது ,
வேதாந்த உலகம் போய்,
இன்று வேதாள உலகமாய்
பணம் காய்க்கும் மரம் தேடி ,
மடிந்துபோனார் பாதிபேர் !

அச்சிடும் பணங்களில்
அவனவன் பெயர்கள் இருக்குமா
இல்லை இல்லை ,
கொடுத்து பழகிப்பார் ,
சேர்த்து வைத்த பணத்தை காட்டிலும்
சேர்ந்து வரும் புண்ணிய கணக்கு ,
வாழ்ந்த நாட்கள் கணக்கில்லை ,
வசதிமட்டும் தான் வாழக்கையில்லை ,
ஊர்போற்றும் வசதி வேண்டாம் ,
உண்மையான மனிதனாய் வாழ்ந்துப்பார் !

எழுதியவர் : வினாயகமுருகன் (6-Apr-12, 3:00 pm)
பார்வை : 1756

மேலே