உனக்கொரு உபதேசம் - என் கடமை
ஊழலே செய்யாது
லஞ்சமும் வாங்காது
நேர்மையாய் வாழ்வாயடா - தோழா
வாழ்கையில் செளிப்பாயடா
வாழ்க்கையை நேர்மையென்ற
பாதையில் நீ செலுத்து
உலகமே உனதாகுமே - தோழா
விண்ணையே தொடுவாயடா
படித்து என்ன லாபம்
அறிவை விற்றாயே
லஞ்சம் நீ வாங்கியே - தோழா
மானம் இழந்தாயடா
படித்தும் புத்தியின்றி
பிச்சை எடுத்தாயடா
பிச்சைக்கரனுக்கும் - உனக்கும்
வேற்றுமை இல்லையடா - தோழா
வேற்றுமை இல்லையடா
லஞ்சமே வாழ்கையென்று
வாழும் உனக்காக
சொல்லும் உபதேசமே - இதையும்
நினைவில் கொள்வாயடா - வாழ்கையில்
திருந்த முயல்வாயடா
என்ன தான் சொன்னாலும்
காதில் நீ கேட்டாலும்
சொரணை இருக்காதென்றே
தெரிந்தும் செய்தேன் - என் கடமையை
நானும் முடித்துக் கொண்டேனடா