தமிழின் நிலை

தமிழ் மொழி
நிலைக்க .......
பல வழிகள்
கடைபிடிகிறார்கள்
தமிழ் நேசர்கள்.......

30 நொடி
தமிழில் பேசினால்
பரிசு நிச்சயம் என்றது
தமிழ் தொலைகாட்சி ஒன்று ........

இலவசமாக .........
கற்று தந்தாலும்
ஏற்க மறுக்கிறார்கள்
ஆங்கில மோகர்கள் ........

இந்நிலையில்
தமிழுக்கு உயிர் பிச்சை
கொடுத்தது ..........
உயர்நீதி மன்றம்

ஐந்தாம் வகுப்பு வரை
இருக்கட்டும் என்று .........

தமிழின் ஆயுள் நரம்பு
நசுங்கி கொண்டு இருக்கிறது

தமிழ் உயிர் வலி
தாங்க முடியாமல்
உதவி உதவி என்று
கேட்கிறது ..........

யார் காதிலும் விழவில்லை

பாவம்..........
தமிழுக்கு எப்படி தெரியும்
உதவி கேட்க கூட

Please help me என்று
சொல்ல வேண்டும் என்று ........

எழுதியவர் : கவிஞர் :ஜெ .மகேஷ் (8-Apr-12, 7:32 pm)
Tanglish : thamizhin nilai
பார்வை : 245

மேலே