உலக திருநாள்
அன்பின் கருவிலே
அகிம்சை பிறக்கட்டும்
இரவோடு இரவாக
இம்சை மடியட்டும்
இதயத்தின் வலி தீரட்டும் -என்றும்
இனிதாய் உயிர்கள் வளரட்டும்
குழந்தையின் கன்னகுழில்
கலவரம் புதையட்டும்
சாதி மதம் இல்லாமல்
சமத்துவம் விழிக்கட்டும்
உன்னுடைய உயிராக
ஒவ்வொருவரையும் நேசி
ஒரு உயிருக்கு விலையாய்
இந்த உலகம் ஈடு இல்லை
என்பதை யோசி
மனித நேயம் கொண்டாடும்
நாளே ........
உலக திருநாளாகும் .........
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
