கடவுள் மனிதன்
உயிரில்லாதவன் மனிதனில்லை
உருவம் இருப்பவன் இறைவனில்லை
இரண்டுபேரும் இல்லையே
உலகம் என்பதில்லையே ...
இதுதானே உண்மை
இதில் ஏனோ சிலருக்கு பொய்மை
மனிதன் கடவுளாக முடியாது
கடவுள் மனிதாக மாற ,பிறக்க, வாழ,உருவமாக முடியாது
பாலும் அவன்தான் படைத்தான்
ஆல்கஹாலும் அவன்தான் படைத்தான்.....
நெருப்பை அவன்தான் படைத்தான் சுடும்
குணத்தை அவன்தான் படைத்தான்
இதில் வேற்றுமையை அறிவில் கொடுத்தான் ........
இறப்பை கொடுத்தான் ஆனால்
அதன் நாளை மறைத்தான் தெரிந்தால்
மறப்பான் இறைவனை மனிதன்
அதனாலே மறைத்தான் ......