கண்தானம் எந்த நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களிடம் பெறப்படுவதில்லை?
Contraindications for eye donation:
கீழ்க்கண்ட நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் கண்கள் தானம் செய்யவும், கருவிழி மாற்று அறுவை சிகிட்சைக்கும் (Corneal transplantation) பயன்படாது.
1.எய்ட்ஸ் நோய்.
2.ஈரலைப் பாதிக்கும் Hepatitis B and C வைரஸினால் உண்டாகும் காமாலை நோய்.
3.வெறி நாய் கடியால் ஏற்படும் ரேபிஸ் நோய்.
4.இரத்தப் புற்று நோய் (Acute leukemia)
5.ரண ஜன்னி (Tetanus)
6.இரத்த நுண்ணுயிர் நச்சு நோய் (Septicemia)
7.மூளைக் காய்ச்சல் (Meningitis and Encephalitis)
8.காலரா
9.கண்ணில் ஏற்படும் புற்றுநோய் (Retinoblastoma)