தமிழ்

மொழிப்பற்றும் மொழியை வளர்க்க வேண்டுமென்ற ஆர்வமும் எல்லோருக்கும் இருக்கிறதா என்றால் ........
ம்ம் , ஊம் , ம்ம் , உஊம் இப்படி பதில் சொல்ல பல வகையில் பலர் யோசிக்கலாம்.தமிழனுக்கு அந்த பிரச்சனையில்லை ஏனெனில் தமிழன் நேசிக்கும் பட்டியலில் முதலிடம் தமிழ் மொழிக்குதான் இருக்கும். ஊரைவிட்டு , மாவட்டத்தைவிட்டு, மாநிலத்தைவிட்டு , நாட்டைவிட்டு , நாடேகடதினாலும் தமிழனின் சுவாசக்காற்றில் தமிழ் தான் கலந்திருக்கும்.அயல் நாட்டிற்கு சென்றப்பிறகும் தமிழ் சார்ந்த பொருட்களை வாங்க, சுவாமி தரிசிக்க,உறவாட என எல்லாவற்றிற்கும் தமிழன் தமிழை தேடி ஓடும்போது அவனுக்குள் தேங்கியிருக்கும் பற்றை உணராமல் இருக்க முடியாது.
அயல் நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய் மொழியை பயிற்றுவிக்க பேராவல் கொண்டுள்ளனர் ஆனால் அதை நிறைவேற்றும் வலி தெரியாமல் திண்டாடுகின்றனர்.அயல் நாடுகளில் புலம் பெயர்ந்த தமிழர்களின் தமிழ் படிக்க வேண்டுமென்ற கனவை நிறைவேற்ற ' காவியா கிரியேடிவ் மீடியா ' சார்பாக திரு. சரவணன் கண்ணன் , திரு.அருள்மணி ஆகிய இருவரின் ஒருமித்த உழைப்பில் இணையத்தின் மூலம் பாடலோடு, படக்காட்சிகளோடு 'தமிழ் டைஜிஸ்ட்' என்ற வலைத்தளத்தில் தமிழ் மொழி பயிற்றுவிக்கப்படுகிறது .
தமிழ் மொழி அறியாதவர்களுக்கு மட்டுமல்ல அறிந்தவர்களுக்கும் இங்கு வாய்ப்பு உண்டு.நீங்கள் எழுத்து திறம் கொண்டவர்களாக இருந்தால் உங்கள் படைப்புகளை அங்கீகரிக்க காத்திருக்கிறது 'தமிழ் டைஜிஸ்ட்'. எழுத்து படைப்பாளிகளே தொடர்பு கொள்ளுங்கள் தாயை (தமிழ் மொழி ) சேர்ந்து வளர்ப்போம்

எழுதியவர் : வைதேகி balaji (11-Apr-12, 12:33 pm)
பார்வை : 831

மேலே