ஏழென்பது எட்டாக் கனி....!
மெய்ப் பொருள்
தேடவாய்ப்
பொய்யென ஒருப்
புழுக்கூட்டம்
சேற்றில் நெளிந்தபடி
காண்பொருள் கண்டதாய்
மூக்கரு முனிவர்க்
கூட்டமென
மார்தட்டி அலைகிறது......
விஞ்ஞானப் பாதகர்களோ
சிறகுகளைக்
கத்தரித்துப்
பின் அலுமினியப்
பறவைகளில் வான் நோக்கிப்
பறக்கின்றார்......
மெய்ஞானம் என்பதுவே
நாம் புரிந்துக்
கொள்ள விழையாத
விஞ்ஞானம் தான்...
ஆற்றலுக்கு ஐன்ஸ்டீன்
வருவித்த அரைகுறைச்
சமன்பாட்டிற்குள்
ஆழப்புதைந்துவிட்ட
மூடர்கள்
ஆறாம் அறிவதனைக்
கடப்பதுதான்
எளிதாகுமோ????
ஆறிலேப் புதைந்துவிட்ட
மந்த மா மானுடக்
கூட்டம்
இருப்புக்கும் இறப்புக்கும்
சூத்திரம் சொல்லாதவரை
ஏழென்பது எட்டாக் கனி தான்.......!