சித்திரை பேசுதடி
எம் மொழி பாராட்டி
எம் கவி திறன் சிராட்டி
எம் உலகம் வாழுதடி
எம் தமிழ் மொழி வாழுதடி
இம் நாட்டு மக்கள்
இம் மொழி பேசுகையில்
இம் தேசமே குலுருதடி
அம் என்னும் அம்மா
அப் என்னும் அப்பா
அது எவனும் பெறாத கப்பா
அது நம் தமிழ் மொழியில் பிறந்த சூப்பா
அது நமக்கு நா வழி வந்த வெண்பா ...
எது தேசம்
எது வையகம்
எது தாயகம்
எது உலகம்
எது கழகம்
எது இனம்
எது மொழி
அது அத்தனையும் தமிழ் கேட்பா
இனம் இல்லை
சினம் இல்லை
கணம் இல்லை நம் தமிழ் மொழிக்கு
துயர் இல்லை
துங்கவும் இல்லை
ஆங்கிலம் நுழைந்தாலும்
அழிக்கவும் இல்லை
பசி இல்லை
பட்டினியும் இல்லை
பாகுபாடு பார்க்கவும் இல்லை
என்ன தமிழர்க்கு
என் நாடு மொழி இருக்கு
எண்ண நினைவிருக்கு
என்நாளும் புகழ் இருக்கு
சித்திரை பிறந்து இருக்கு
சித்தாமல் சிரித்து இருக்கு
உள்ள தமிழர்க்கு
உள்ளார வழி இருக்கு
உலகம்
சிரிக்கவே
சித்திரைத் திருநாளும் பிறந்து இருக்கு .....
வையகம்
வாழவே
தாய் மொழியும் வாழ்கவே
சித்திரை பேசுதடி ....
சிங்கார தமிழை வாழ்த்துதடி.......
இனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்
எழுத்து . காம் தமிழ் உறவுகளுக்கு வாழ்த்துக்கள்