தையே தமிழ்ப் புத்தாண்டு
புத்தாண்டு வாழ்த்து சொல்லி -உன்
மானம் இழக்கின்றாய் தமிழா !
சித்திரையில் உனக்கா புத்தாண்டு ?
அப்படியானால்
நித்திரையில் இருக்கிறாய் தமிழா நீ!
அறுபது வருட சுழற்சி -தீய
ஆரியனின் சூழ்ச்சி!
மறைமலைகள் சொன்னது புத்தாண்டு
தைப்பொங்கல் நாளே தமிழருக்கு புத்தாண்டு
தூய தமிழனுக்கு தமிழ் புத்தாண்டு .
அறுபது பிள்ளை பெற்ற
ஆபாச கதைகளை
ஆரியன் அவிழ்க்கிறான் மூடன்
நந்தன ஆண்டாம்
நரிகளுக்கு புத்தாண்டாம் ..
தமிழா
நீ ஆரிய நரியா?
திராவிட ....?