வாழ்க தமிழ் வளர்க அதன் புகழ்

தமிழென்ற குழந்தையே உனை
தாலாட்ட ஆவல் கொண்டேன்
மடிமீது அமர வா - உன்னை
மனதார சீராட்டுகிறேன்........

கிள்ளி விடும் கூட்டம் உண்டு
கிட்டே போகாது  விலகி வா
ஆங்கில நாக்கு அது
அபாய விசமது விலகி வா......

திரை இசைப் பாடல் உன்னை
திக்கு வாயாய் மாற்றக் கூடும்
திரும்பி அதைப் பார்க்காதே என்
திசை நாடி ஓடி வா  

நர்சரிகள் உன்னை தொட்டுக்க
நல்ல ஊறுகாயாய் பயன்படுத்தும்
நாக்குகள் உன்னை ருசித்தால்
நல்ல பெனால்டி போட்டுவிடும்

குருதி எலாம் தமிழ் என்று
கூட்டத்தில் மேடைப் பேச்சு
கும்மாளம் போடுகையில்
குதித்து வரும் இங்க்லீஷ் வீச்சு

சங்கத் தமிழ் எங்கு போச்சி...?  
சாவகாசமாய் தூங்கிப் போச்சி..!  
சவப் பெட்டியாய் பிற மொழிகள்
சர்வ சாதாரணமாய் பயனாச்சு ! 

தமிழென்ற குழந்தையே உனை
தாலாட்ட ஆவல் கொண்டேன்
உன்னை உறங்க வைக்க அல்ல
உசுப்பி விட்டு உணர்வு வைக்க

உலகாளும் ஈசனே தமிழ் கடவுள் தந்தையே
ஊமையாக போக வை உணராத தமிழ் நாக்கை
தமிழகத்தில் எவரேனும் பிறமொழிகள் சொன்னால்
தனை உடனே பொசுக்கிவிடு உன் முக்கண்ணால்

வாழ்க தமிழ் வளர்க அதன் புகழ்
வெல்க தமிழ் சொல்க நற்பண்பாடு 
வீழ்க கொடும் சொற்கள் என 
சொல்க தமிழ் புத்தாண்டு வாழ்த்து 

நன்றி அன்புடன் ஹரி  

எழுதியவர் : (13-Apr-12, 1:16 pm)
பார்வை : 831

மேலே