ஏக்கம்
சொட்டுநீர் பாசனம் அரசாங்கத்திடம்
அனுமதி வாங்கவில்லை !
யாரும் அனுமதி கேட்கவும் இல்லை !
ஆனால் ,
எங்கள் தெரு குழாய்கள் செய்தது !
ஏக்கத்துடன் மக்கள் !
ரிக்டர் அளவுகளில் நில நடுக்கங்கள் இல்லை !
கட்டிடங்களில் சிறு அசைவு கூட இல்லை !
ஆனால் ,
நிலங்கள் அனைத்தும் விரிசல்களுடன்
கிடக்கின்றன.
ஏக்கத்துடன் விவசாயிகள் !
சூரிய வெய்லும் குறைவில்லை !
வரிசையும் குறைவில்லை !
ஆனால் ,
அரிசி மூடை மட்டும் குறைகிறதாம் !
ஏக்கத்துடன் வரிசையில் நிற்பவர்கள் !