இளமையில் க(ட)ல்
ஓடாதடா,,. டேய்!!! என்று
அன்று என்னை,
நீ துரத்திய
கடற்கரை நாட்கள்
நினைவுகளாக
துரத்துகின்றன இன்று
தனியே நிற்கின்ற
என்னை!
கடற்கரையெங்கும்
இறைந்து கிடக்கின்றன!
கடந்த காலமாக
இறந்து கிடக்கின்றன!
என் கண் பார்வை தீண்டிய
உனது
கால்தடங்கள்!
கடலும் காதலும் சேர்ந்து
நமக்காகச் சமைத்த
அந்நாட்கள்,
கெடாமல் இருக்கின்றன
பாதுகாப்பாக
என்நெஞ்சில்!
சாட்சியே இல்லை என்றுதான்
விட்டுச் சென்றாயோ?
சகியே!
சாகவில்லை,
சுண்டல் சிறுவர்கள்!
காதல் எனும் சுனாமியில்
சீரழிந்த
என் வாழ்க்கை!!!
நிவாரண நிதியா...தாடி?
கடற்கரையே! காதல்கரையே!
எல்லையேயில்லை!!!
உனக்கும், உன் பொறுமைக்கும்!
தெரிந்தவனும் தெரியாதவனும்
தெரிந்தும் தெரியாமலும்
செய்யும் ஓர் தவறு, காதல்!