மௌனமான நேரம்

நம் பிரிவின் பொழுது
உன் ஓசை கேட்க,
முகம் தெரியாத நபராய்
தொலைப்பேசியில் நான் !
யாரென்று நீ கேட்ட
அந்நேரம்,
நான் அடைந்த
நிற மாற்றத்தை
சொல்லாமல்
சொல்லி முடித்தேன் ;
மௌனத்துடன் உன்னிடம் !!!

எழுதியவர் : ரியாதமி (16-Apr-12, 8:55 pm)
சேர்த்தது : Riyathami
பார்வை : 298

மேலே