உழைப்பின் ஊதியம்

அதிகாலை பொழுதினில்
வெறுங்காலால்
வெளுத்த வேட்டியுடன்
சேற்றில் கால் பதித்து
கட்டிளம் காளையை கைப் பிடித்து
நிலம் பிளந்து
வாயினில் விதைத்த விதை
விரிச்சமாய்
வான்னோக்கிய
நெல்மணி சுமை தாங்கமறுத்து
பெண்ணின் நாணமாய்
தரை தடவியது
அம்மணிகள்
அவன் வீடு புகுவதற்குள்
அவன் புரண்டபாடு
உழவுக்கலப்பையும்
உருண்டிருக்காது
புரண்டிருக்காது .


கதிர் அறுக்கும் பெண்டிர்
கருவறை சுமந்த குழவிவை
கருவேலை நிழல் கிடத்தி
கதிரறுக்கும் பொழுதினில்
கைப்பட்ட காயத்தை
களிமண்ணால் மருந்திட்டு
மதிய உணவுண்ணும்
பொழுதினில்
உப்பிட்ட மிளகாயை
உண்ணும் தருணத்தில்
உரசிய காயத்தில்பட
புரண்ட கண்ணீரும்
புலர அவள் பொழுதும்
புண்பட்ட வாழ்கையை
புகழ்ந்தாலும் போதாது .


குழந்தை உழைப்பு
கொஞ்சி மகிழும் பள்ளி
துள்ளி தெரியும் விளையாட்டு மைதானம்
என்ற நிலைமாறி
ஒரு வேலை உணவிற்கு
நகர குப்பை தூய்மையாளராய்.
தொழிற்சாலை பணியாளராய்.


ஈழத்தில் தமிழ் மொழிக்காய்
தன்னிடத்திற்காய்
தன்னுயிர் ஈந்தும்
தமிழினத்திற்கு உழைத்த
தமிழர் உழைப்பும்
பகல் கனவாய் ...............


நாட்டு விடுதலைக்கு
உழைத்த வீரர்களுக்கு
இருளில் கிட்டிய
விடுதலை
விடிய மறுத்தமையால்
அவர்களது உழைப்பும்
வீணே ?


ஆசிரியரின்
உண்மை உழைப்பிற்கு
ஊதியம்
அவரது உயிரிழப்பு
சென்னையில் ...........



இளையகவி

எழுதியவர் : இளையராஜா.பரமக்குடி (18-Apr-12, 12:54 pm)
பார்வை : 586

சிறந்த கவிதைகள்

மேலே