மாய கண்ணாடி நான் அல்ல

மழையில் நனைவது
உனக்கு பிடிக்கும் -அது
எனக்கு தெரியும்
மழையில் நனைத்தேன் ..........

அடை மழை அது
அனல் மழை ஆனது
அதில் நான் மட்டும்
தனியே எரிந்தேன்...............

வார்த்தைகள் எல்லாம்
தீயாகி நெஞ்சை காயம்
செய்கிறது ........

குழந்தை மன நிலை
தெரியாமல் நீ
குழம்பி போகிறாய் .........

அழகிய பூக்களை பறிக்காமல் -அதன்
அழகை ரசித்திருந்தேன் .........

அதுவும் ஒரு நாள் வாடியது
எதுவும் சொல்லாமல்
இதயம் கருகியது .........

உருவம் இல்லாத காற்றை போல்
என் உயிரில் வலிகள் வீசுகிறது

உனக்கு என்னை புரியாதா ?
உண்மை காரணம் தெரியாதா ?

கவிஞன் மனதை அறியாமல்
கல் எரிந்து பார்க்கிறாய்.....

உடைந்து சரிந்து விழும் போது
புரிந்து கொள்வாயா ?

அழகோ அசிங்கமோ
எதுவானாலும் அது
உண்மை சொல்லும்

நான் ஒரு கண்ணாடி -நீ
என் முன்னே நில்லடி

நீ இல்லாத போது நான்
வெற்றிடம் தானடி

யாரை நான் காட்டுவேன்
நீ இல்லாத போது ........
உன்னையே நான் காட்ட
மாய கண்ணாடி நான் அல்ல ..........

எழுதியவர் : கவிஞர் :ஜெ .மகேஷ் (20-Apr-12, 12:45 pm)
பார்வை : 305

மேலே