வெறுப்பின் விளிம்பில்
கற்பனை உலாவில்
கனவுகளை ரசித்தேன்;
சந்தோஷத்தின் நறுமணத்தை
நினைவுகளில் மட்டும் சுவாசித்தேன்;
வலிகளின் இம்சையை
இதய துடிப்பில் உனர்ந்தேன்;
புன்னகையின் உயரத்தை
உதட்டளவில் வைத்தேன்;
உவர்ப்பின் சுவையை
கண்ணீரில் ருசித்தேன்;
தவிப்பின் அழுத்தத்தால்
தினம் தினம் துடித்தேன்;
நிம்மதி பசியால்
நினைவின்றி திரிந்தேன்;
குழப்பங்களின் கூச்சலால்
கனம் தோறும் களங்கினேன்;
உணர்ச்சிகளின் பெருக்கத்தை
உள்ளடக்க நினைக்கிறேன்;
போராட்டங்களை போட்டியிட்டு
பொடிநடை நடந்தேன்;
ஆர்ப்பாட்டங்களின் அரவணைப்பில்
ஆயுள் தேய்கிறேன்;
தவறுகளின் எண்ணிக்கையை
அனுபவத்தில் கழித்தேன்;
அனுபவத்தின் பாடங்களை
மனதோடு தேக்கினேன்;
நம்பிக்கையை மட்டும்
நெஞ்சோடு சேர்த்தேன்;
வாழ்க்கையின் தொடர்கதையை
விதியிடம் ஒப்படைத்தேன்;
விதியை மட்டும் நம்பி
வாழ்க்கையை வாழ்கிறேன்!!!!!!!