மனம் ஒரு குரங்கு

நல்லவனாகவும் இருக்க பிடிக்கவில்லை
வில்லனாகவும் இருக்க பிடிக்கவில்லை!

காவலாளியாகவும் இருக்க பிடிக்கவில்லை
கள்வனாகவும் இருக்க பிடிக்கவில்லை !

ஆத்திகனாகவும் இருக்க பிடிக்கவில்லை ,
நாத்திகனாகவும் இருக்க பிடிக்கவில்லை !

வசதியும் பிடிக்கவில்லை
வறுமையும் பிடிக்கவில்லை!

சந்தோஷமும் பிடிக்கவில்லை
துக்கமும் பிடிக்கவில்லை !

இளமையும் பிடிக்கவில்லை ,
முதுமையும் பிடிக்கவில்லை !

உண்மையையே பேசவும் முடியவில்லை
பொய்மையும் பேச பிடிக்கவில்லை !

ஒழுக்கத்தையும் மறுக்க முடியவில்லை ,
சில இன்பங்களை தவிர்க்க முடியவில்லை !

கடனே வேண்டாம் மறுக்கவில்லை ,
கடனே இருந்தாலும் பிடிக்கவில்லை!

இயற்கையை ரசிக்க மறந்ததில்லை ,
அதை அழிக்க துணியவும் தயங்கவில்லை !

விலங்கையும் நேசிக்க மறக்கவில்லை ,
அதனை வேட்டையாடவும் தயங்கவில்லை!

மழையே வேண்டும் மறுக்கவில்லை ,
தொடர் மழையே என்றாலும் பிடிக்கவில்லை!

பெண்ணே தெய்வம் மறுக்கவில்லை ,
அதை ஏற்றுக்கொள்ளவும் மனமும் இல்லை !

மனிதனாய் வாழ மறுக்கவில்லை ,
மிருகமாய் வாழ்ந்தாலும் தடுத்ததில்லை !


என்னையா செய்வது ,
எதுவும் பிடிக்கவில்லை ,
மாறி மாறி பேசும் மனம் குரங்காயிற்றே ,
அதை தேடி தேடி தோற்றது தான் மிச்சம் !

சதை வைத்து
தைத்த எலும்புக்கூடு ,
அதில் எதை எதையோ பார்க்க முடிந்தது ,
"மனம் ஒன்றி தவிர "

எழுதியவர் : வினாயகமுருகன் (20-Apr-12, 1:10 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 1156

மேலே