என் அம்மா
தன் உதிரம் தந்து
என்னை உயிர் பெற செய்தாய்!
நான் தவழ்ந்த போது
என்னுள் யாதுமாகி நின்றாய்!
நான் உயர்ந்த போது
எனக்கு தூணாக நின்றாய்!
அவள்-
என்னை விட்டு மரித்த போது
நான் உணர்வில்லா
கல்லாக மாறிவிட்டேன்
என் அம்மா!
நீ எங்கே இருக்கிறாய்
நான் உன் கருவறையில்
மிக சந்தோசமாக இருந்தேன்.
இன்று நீ இல்லாத உலகம்
என் மரண படுக்கைக்கு சமம்