விடலையின் வெள்ளிச்சம்
பருவம் குடிகொள்ளும்
பரவசம் மனதை கிள்ளும்
காதலும் கிடைத்திடுமே
எடுத்துரைக்க தயங்கிடுமே
சுகங்கள் தெரிந்திடுமே
தீராத ஊற்றாய் பெற்றிடுமோ
தாகங்கள் அடங்கிடாதே
அறிவுரைகள் பிடித்திடாதே
புரியாதவை எல்லாம் புரிந்திடும் தருணம்
தீயவை என்று தரம் பிரித்திடாத உணர்வும்
அடிமையாக்கிடுமே சற்று தளர்ந்திட்டால்
சாகும் வரை வலித்திடுமே பாதை விலகிட்டால்