ஹைக்கூ
நிலம் பிளந்து
உயிர்கள் விதையானது
சுனாமி...!
முன் ஐந்து ஊழல்
பின் ஐந்தில் பட்டியலிடுதல் / மறு பரிசீலனை செய்தல்
அரசியல்...!
சாக்கடையை சுத்தம் செய்தவன்
சாராயத்தில் ஆசிங்கமாகிரன்
வறுமையின் நிறம் கருப்பு...!
கோடியில் புதைந்த மரங்கள்
கருப்பு வைரமானது
எதுவும் வீணில்லை உலகில்
பால்வீதி வயிற்றில்
பேரண்டம்
ஜீன்களின் பிரசவம்
நீளும் வானம்
நிழலில்லா உண்மை
உலக நீதி...!
கேட்டது கிடைக்கும் முன்
கேள்விகள் தொடர்கிறது
ஆசைக்கு அளவில்லை...!