கல்வி உரிமை sattam

வெற்றி விலாசம்
கனாக்களும்
வினாக்களும்
மழலைகளின்
இருவிழி வாசல்கள் !

அன்பளிப்பும்
அறிவளிப்பும்
பெற்றோரின்
இரு பெருங் கடமைகள் !

மழலையர் இதுவரை
நமது விருப்பத்தில்
பெற்றனர் கல்வி-
இனி கல்வி அவர் உரிமை !
உரிமை அளிப்போம்.
தன்னில் உணரவும்
தன்னை வெல்லவும்
உரிமை வழி தரும்.!

வினாக்களின் விடியல்,
விடைகளின் படையல்- ஆசிரியன்
ஆர்வத்தின் குவியல்,
ஆற்றலின் அவியல் – குழந்தை
ஏடு தனக்கென்று இயற்றிய
கவிதை ஆசிரியன்!
இயற்கை தனக்கென்று படைத்த
உவகை குழந்தை!
அறிவை அளிப்பவன் ஆசிரியன்
பெற்ற அறிவால் உலகு காப்பவன்
குழந்தை!

உணவளிப்பது மட்டும் அல்ல
வாழ்க்கை-
உணர்வளிப்பதும் கூடத்தான் !

கருப்பையில் கண்ணுறங்கி
கால நேரம் பார்க்காது பிறந்து
தாய் மடி துயின்று
தந்தை நெஞ்சு உதைத்து
பி்ஞ்சு பாதம் பதித்து
தொடக்கப்பள்ளி நுழைந்து
அகரம் அறிந்து
அணு அறிவின் ஆக்கச்சுழலில்
மானுடம் சிக்கி வாழ்ந்திடும்
வழி காண கல்லூரி கண்டு
பல்கலைக்கழகம் மீண்டு வா !
-புதுவை காயத்திரி

எழுதியவர் : (22-Apr-12, 7:56 pm)
சேர்த்தது : puthuvai gayathiri (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 457

மேலே