இன்ப சுற்றுலா பயணம்

நாங்கள் சென்ற இடம் மூனாறு!

எங்கள் அனைவரின் மனதில்
இன்ப பாலாறு!

எங்கள் சிறாரின் மனதில் உற்சாகம்
இளசுகளின் இன்ப கேலி கிண்டல்!

எங்கள் பெரியவர்கள் பேசி கொள்ளும்
குடும்ப சுவாரசியங்கள்!

எங்கள் காளையர்கள் அடிக்கும்
இன்ப கூத்து கும்மாளம்

நாங்கள் சென்ற இடமெல்லாம்
குளிர் சாரல்மழை!

இயற்கை கொஞ்சும்
இன்ப கான மழை!

நாங்கள் மகிழ்ந்த மகிழ்சிக்கு
இனி ஏது எல்லை!

ஆகையால்

அன்பு நண்பர்களே அன்பு அன்பர்களே!
வருடம்தோறும் இன்ப சுற்றலா செல்வீர்

குடும்ப சந்தோசத்தை
முற்றிலும் உணர்வீர்

எழுதியவர் : thilakraj (25-Apr-12, 3:10 pm)
பார்வை : 2369

மேலே