முதியோர் இல்லம்..!
வஞ்சிக்கப் பட்ட வயதானவர்கள்
கூடி வாழும் கோட்டை.
மகனால் ஒதுக்கப் பட்ட தகப்பனின்
தாய் வீடு..
மருமகளால் தூக்கி எறியப்பட்ட
மாமியாரின் அரண்மனை
பேரன்களை முத்தம் கொஞ்ச விரும்பும்
பெரியவர்களின் சொர்க்கம்..
பிள்ளைகளின் பாசத்திற்கு ஏங்கும்
பெற்றோர்களின் கண்ணாடி மாளிகை.
அவர்கள் கண்ணீரால் வளர்க்கப்பட்ட
பூஞ்சோலை கொண்ட புதியதோர் வீடு.
புன்னகையே அறியாத பூக்கள்
கொண்ட சோலை..
பிஞ்சுக் குழந்தைகளின் நெஞ்சை அல்ல விரும்பும்
பெரியவர்களின் பிருந்தாவனம்
வருசா வருஷம் வளர்ந்து வரும் வாசல்
சாமியார் போல் சலனமின்றி அமர்ந்திருக்கும்
தியாகிகளின் தேசம்..
உயிரே இன்றி உடல் மட்டும்
வாழும் உறைவிடம்
மேலாக, பாரத பண்பாட்டிற்கே சவாலாக
விளங்கும் சாபக்கேடு
ஆம்.
அது தான் இல்லம்
முதியோர் இல்லம்..!