காரும் புலிவாலும்

மன்னர்கள் தேரில் போவதை
காவியங்களில் படித்து
கார் ஓன்று வாங்கி
தேர் என்று நினைத்து
மகிழ்ந்துபோனேன்.
அப்புறம்தான் தெரிந்தது
அதிலுள்ள அவஸ்த்தை....
மாநகர சாலையில்
வேகமாக போனால்
முன்னாடி போவோரை
முத்தமிடுது
மெதுவாக போனால்
பின்னாடி வருவோரால்
இடிவிழுது.....
சாலை எங்கும்
மெட்ரோ ரெயில்
சடுகு ஆட்டம்
காரில் அலுவலகம் போனால்
காணாமல் போகுது அரைநாள்
ஓட்டத்தெரியவில்லை
எனக்கு என்று
ஓட்டுனர் வைத்தால்...
ஒட்டுமொத்த உதியமும்
சரியாகப்போகுது அவருக்கே!
விற்றுவிடலாம் காரை என்று
விலை பேசினால்
அரை விலை கால் விலை
அல்லோலப்படும் நிலை....
நான் கார்வாங்கிய கதை
புலிவாலை புடித்த கதை
இபோதெல்லாம் நான் பாடுவது.....
நான் கார் வாங்க போனேன்
ஒரு கழுதை வாங்கி வந்தேன்