அம்மா..
ஆயரமாயிரம் கவி வடித்தாலும் அன்னையின் அன்புக்கு ஈடாகுமா..........
எத்தனை எத்தனை சொந்தங்கள் வந்தாலும்
அத்தனையும் அவளுக்கு நிகராகுமா..
தாய்க்கு பின் தாரமென்று யார் சொன்னது
தாரம் மாறலாம் தாய் மாறுமா..
நூறாண்டு காலங்கள் நான்வாழ்வதர்க்கு
மூலதனமே நீதானம்மா..
வயிற்றில் இருந்து வெளி எடுத்து
நெஞ்சில் என்னை சுமந்தாய் அம்மா..
வாழ்க்கை முழுதும் உன்னை காக்கவே
வாழ்கிறேன் நான் உனக்க்காகம்மா..