ஜப்பானிய மொழியில் எமது ஹைக்கூ கவிதைகள்
ஏற்றத் தாழ்விலும்
இணைந்த இயக்கம்
விரல்கள்
*even though unequal
unity in function…
the fingers!
等しさは違えど団結指五本
.....................................................................
பல வண்ண மலர்கள்
நார் ஒன்றில் ....
ஒருமைப்பாட்டுணர்வு
*many coloured flowers
in a single fibre …
the feelings of integrity!
繊維なす色々な花統合や
......................................................................
கண்ணீர் கரைபுரண்டது
விற்ற வீட்டின்
சிட்டுக்குருவிகளுக்காக
*the tears overflowed
for the little sparrows…
we sold the house!
家を売り雀の子らに涙する
.................................................................
நீரில் மூழ்கினாலும்
மலர்ந்தன நீர் வட்டங்களாய்
குளத்தில் எறிந்த கல்
*though drowned
blossomed as water circles…
stone thrown in the pond!
石投げる池の水面に花が咲く
..............................................................
மரத்தை கொத்தாமல்
மரம் கொத்திகள் மௌனமாய்
சுற்றுச் சூழல் பாதுகாப்பு
*to protect the environment
refused to peck
the silent woodpeckers
つつき止む環境保護の啄木鳥や
..............................................
பறவை மீதமர்ந்து
வானத்தில் பறக்கலாம்
பரந்த மனப்பான்மை இருந்தால்
*sitting on the bird too
you can fly in the sky…
if broad-minded!
鳥に乗り空飛ぶ君は寛大や
......................................................................
தொடுவானத்தை தரிசிக்க
இனிய பயணமாய்
பிறந்த கிராமம் நோக்கி.
*for seeing the horizon
a sweet journey…
towards the home town!
旅思う水平線のふるさとへ
......................................................................
கா.ந.கல்யாணசுந்தரம்