[217 ] முன்னிலும் புதிய ஆண்டு தாரும்..!

காலங்கள் தோறும் கனமழை வந்து
.... களிப்புக் கூட வேண்டும் - இறைவா
.... கனிவு சேர்க்க வேண்டும்.
ஓலங்கள் மாறி ஒற்றுமை தேறி
.... உதவி வாழ வேண்டும் – இறைவா
.... உந்தன் ஆசி வேண்டும்....................... ....01

ஒப்பனை யில்லா உணர்வுகள் ஒன்றி
.... உயிர்கள் களிக்க வேண்டும்-இறைவா
.... உலகு செழிக்க வேண்டும்.
சொப்பன மில்லா சுவர்க்கமும் இங்கே
.... சுயத்தில்தொடங்க வேண்டும்-இறைவா
.... சுற்றிப் பெருக வேண்டும். .......................02

நாடி ஓடியே நல்ல செல்வமே
.... நாளும் சேர்க்க வேண்டும் -இறைவா
.... நலிவு போக்க வேண்டும்.
பாடி ஆடியே பரமன் உன்முனே
.... படையல் போட வேண்டும்-இறைவா
.... பகிர்ந்து உண்ண வேண்டும். ..................03

தன்னை உணர்ந்து தவறுகள் போக்கத்
.... தயவு செய்ய வேண்டும் - இறைவா
.... தடைகள் நீக்க வேண்டும்.
முன்னிலும் புதிய ஆண்டினை எங்கள்
.... முன்பு கூட்ட வேண்டும் - இறைவா
.... முழுமை யூட்ட வேண்டும்......................04
-௦- -௦-

எழுதியவர் : எசேக்கியல்காளியப்பன் (28-Apr-12, 7:52 pm)
பார்வை : 189

மேலே