கவிதை அல்ல பாடல் கொஞ்சம் வாசித்துதான் பாருங்கள் !
பாடலின் கரு : அயராது உழைத்து வெற்றிபெற்றவனை பற்றி....
பல்லவி :
சடுகுடுகுடுகுடு எனதான்
புது சரித்திரம் படைக்க துடித்தான்
தடுதடுதடு எனபல தடுத்தாலும்
முடிமுடிமுடி என முடித்தான்
கரம்இடம்வலம் என இரண்டின் -
விரல் திறம்பட திறம்பட உழைத்தான்
விழும் விழும் விழுமென வியர்வை - துளியில்
தினம் தினம் தினமென வளர்ந்தான்
சரணம் 1 :
விழித்தது சூரியன் இவன் பின்னே
இவன் உறக்கத்தை கண்டதில்லை என்றுமே
ஒருமுறை வளைந்தது நதியுமே
இவன் வளைந்தது வாழ்வில் அதிகமே
பதினேழு முறைதான் கஜினியுமே
படையெடுத்தான் என்கிறது சரித்திரமே
பத்து சதவிகிதம் கூடயில்லை இவன் முன்னே
(சடுகுடு)
சரணம் 2 :
நினைத்தது நினைத்தபடி நடந்தனவே
இவன் உறுதிக்கு மலைகளும் மலைத்தனவே
அடுக்கடுக்காய் இவனது லட்சியமே
அதை அடைவான் என்பது நிச்சயமே
நிழல்மட்டுமே தருமா மரம் என்பதே
பலவிதைகளை உயிராய் தருமல்லவே
இவன் உயர்வும் பலரை உயர்த்துமே
(சடுகுடு)