உன்னால் ...

நீ இல்லாத
திசையெங்கும் ஓடினேன் ...
என்னை
நிலவாய் பின்தொடர்ந்தாய் ...
பாலைவனத்தில்
பனி பாறையாய் !
தனித்திருந்தேன் ..
என்னை உன்
சூரிய கதிர்வீச்சால்
உருக வைத்தாய் ..
கிளைகளுக்கிடையில்
இலைகளாய் மறைந்து இருந்தாலும்
காற்றிலே கலந்து
உதிர வைக்கிறாய் ...
மெத்தையில் படுத்தாலும்
ஆறாத ரணமாய்
உன் உதறலை
முள்பரப்பாகினாய் ...