நட்பின் பிறப்பிடம் நீங்கள் 555
![](https://eluthu.com/images/loading.gif)
என் அன்பு தோழிகளே.....
நான் உங்களோடு உரையாடி
மாதங்கள் பல கடந்தாலும்...
நம் அன்பும் பாசமும் என்றும்
மாறுவதில்லை...
என்றும் என்னையும் என் நலனையும்
மட்டுமே நினைக்கும்...
என் உயிர் தோழிகளே...
உங்களை பற்றியும் கொஞ்சம்
யோசியுங்கள்...
என் நலனுக்காக இறைவனிடம்
பிராத்தனை செய்யும் நீங்கள்...
உங்கள் நலனுக்காக
நானும் செய்கிறேன்...
நாடு கடந்து நான் இருந்தாலும்...
என் நினைவுகள் உங்களையும்...
உங்கள் நினைவுகள் என்னையும்
சுற்றுகிறது...
என்னுயிர் தோழிகளே...
நம் அன்புக்கு ஈடாக இவ்வுலகில்
யாவும் இல்லை...
என்றும் நட்பின் பிறப்பிடமாக
நீங்கள்...
நட்புடன் உங்கள் தோழன்.....