கண்ணீர்...!!!

மழையில்
நனையும்போதெல்லாம்
உடனே வந்து
ஒட்டிக்கொள்கிறாய்
என்னோடு...
இருவரும்
நனைவது போல்,
இதமாய் கனவு காண்கிறேன்
கண்விழித்து கொண்டே...
நீ, என்னோடு இல்லை
என்பதை உணரும்போது
மழை துளியை விட அதிகமாகிறது
நான் சிந்தும் கண்ணீர்...!!!

எழுதியவர் : vijivanan (2-May-12, 12:20 am)
பார்வை : 670

மேலே