அப்பழுக்கில்லாத அழுக்கு....

ஒவ்வொருவரிடமும்
ஒவ்வோர் விதமான அழுக்கு
எண்சாண் உடம்பில்
ஏனைய அழுக்குகள்
ஏராளமாய்....
அழுக்கு மூட்டையை
அத்தனை பேரும்
சுமக்கின்றோம்....
அடுத்தவர் அழுக்கை அகற்ற
ஆயத்தமாகின்றோம்
நம்மிடம் இருக்கும்
சுமைகளை சுமந்தபடி!
நாடாண்ட பித்தனும்
நாடுவிட்ட புத்தனும்
நாளும் தெரிந்த சித்தனும்
இதற்கு விதிவிலக்கல்ல!
போர்க்களமும்
போய்ச்சேருமிடமும்
இங்கு போதிமரமாகின்றது!
அழுக்கை அங்கமெல்லாம்
அலங்கரித்து வலம்வர
வெளித்தோலான
வெள்ளைக்கு என்ன பம்மாத்து?!
கருப்போ, வெள்ளையோ
கறை படிந்த எண்ணங்கள்
இல்லாதிருந்தால்
பிறை போல்
வளர்ந்திடலாமே....
இறுதிப் பயணத்தில்
பள்ளம் தோண்டி
அடுப்பு மூட்டி
ஆயிரம் வாசனைகள் இறைத்து
அழுக்கு மூட்டையை
இறக்கி வைக்கின்றோம்
வெள்ளாவிப் பயணம்
வெண்மையாய்ப் பறந்து
கருமையாய்ப் படிகிறது!
உள் அழுக்கும், புற அழுக்கும்
வெட்ட வெளிச்சமாய்
வான் வெளியில்.....
அப்பழுக்கில்லாத ஆன்மாவோ
அமைதியாய் ஆண்டவனிடத்தில்....

எழுதியவர் : Premi (2-May-12, 1:19 pm)
பார்வை : 180

மேலே