நட்பின் முடிவு!!
புரியவில்லையடி........
நீ நடத்தும் நாடகங்கள்
ஒவ்வொன்றும் !!!
மறந்து விட்டேன் உன்னை.....
என்றுதான் சொல்ல நினைக்கிறன் ????
ஆனால் சொல்லி முடிக்கும்
மறுகணம் நினைவில் நீ!!!
பிரிந்து விட்ட பின்னும்
உன் பெயர் படித்தால்
உள்ளம் புல்லரிப்பது என்னவோ
உண்மைதான்!!!
இந்த முறை உன் பிரிவு
என்னை ஸ்தம்பிக்க செய்யவில்லை.....
காரணம் நீ என்னுள்
விட்டு சென்ற ரணங்கள்!!!..
போகும் போக்கில் புரியவைத்து
விட்டாய் வாழ்வு பொய் என்று!!!
இனி சேர்ந்து வாழும் விருப்பம் இல்லை..
ஆனால் உன்னை தவிர ஒருவருக்கும் என் வாழ்வில் இடமுமில்லை!!!
தோழி!!!!
இறுதிவரை உன்னுடன் இருக்க
விரும்பினேன்.....
நீயோ பாதியிலேயே விட்டு
சென்றுவிட்டாய்...
உன்னிடம் நன் யாசிப்பது ஒன்றுதான்.......
உன் வாழ்வில் என்றேனும்
ஒருகணம் என்னை பார்க்க நேர்ந்தால்???
உன் புன்னகையை உதிர்த்து
விட்டு செல்...
முகத்தை திருப்பிக்கொண்டு
மட்டும் போய் விடாதே!!!