செங்கற்ச் சாமியார்

இவர் எங்கள்
ஏரியாவின் திடீர் விஜயம்!

உயரம் ஆறு அடி
மெலிந்த தேகம் வயதான தோற்றம்!

கொஞ்சம் மனநிலை பாதித்தவர்

இவர்
தான் பார்க்கும் செங்கற் கல்லையெல்லாம்

நடு ரோட்டில் தூக்கி எறிவார்

இவரக்கு
செங்கற் கற்கள் மீது என்ன கோபமோ!

இவர்
குளித்து பல மாதங்கள் ஆகிறது !

அந்த வழியாக போனவர்கள்
இவரை கொஞ்சம் அருவெறுப்பா பார்ப்பார்கள்

சில மூடர்கள்
புரளியால் !

அந்த மனநிலை பாதித்தவரக்கு
அடித்தது யோகம்!

அவரை சித்தர்றேன்றும்
செங்கற்ச்சாமியாரென்று புரளி கிளப்பினார்கள்!

யார் யாரெல்லாம்
அவரை அருவெறுப்பா பார்த்தார்களோ!

அவரக்கு சமமாக அமர்ந்து
அவரிடம் ஆசி வாங்கிச் செல்கிறார்கள்

மனநிலை பாதித்தவர் தெளிந்து விட்டார்
அவரை பார்க்க வரும் பக்தர்கள்!

அவர் மீது பைத்தமானார்கள்

இது என்ன கொடுமை

இந்த
மதிகெட்ட மக்களிடம் இருந்து !

என்று தணியுமோ!!
!! இந்த சாமியார் மோகம்

பலநூறு
பெரியார் வந்தாலும்

இவர்களா பார்த்து திருந்தா விட்டால்

இந்த சாமியார் மோகம் ஒழியாது?

எழுதியவர் : THILAKRAJ (5-May-12, 5:43 pm)
பார்வை : 466

சிறந்த நகைச்சுவைகள்

மேலே