கௌரவ பிச்சை
என் வீட்டின் எதிரே
ஒரு உணவு விடுதி !
அன்று காலையில்
வியாபாரம் சூடு பிடித்திருந்தது !
ஒரு பிச்சைக்காரன்
அவர்கள் கொடுக்கும் உணவுக்காக
ஓரமாக காத்திருந்தான்!
அந்த வழியாக
காவல் துறையை சேர்ந்த இருவர்
தன் இரு சக்ர வாகனத்தில் கீழே வந்திருங்கினர்கள்
20 இட்லி 10 பூரி பார்சல் என்றார்கள்
கடைக்காரர் கொஞ்சம் நேரம் பொறுங்கள்
கட்டி தருகிறேன் என்றார்!
வந்தவர்கள் பொறுமை இழந்தார்கள்
தன் அதிகாரத்தின் பலத்தால்
அக் கடைக்காரனை சத்தம் போட்டார்கள்!
கடைக்காரன் பயந்து
அவர்கள் கூறியதை பார்சல் பண்ணினான்!
வந்தவர்களிடம் பணத்தை கேட்டான்
அதற்கு அய்யா வாங்கி வரச் சொன்னார்கள்!
அய்யா விடம்
பணம் கேட்கிறாய
உனக்கு என்ன
அவ்வளவு திமிறா என்று வினவினார்கள்!
இதை பார்த்து கொண்டிருந்த
பிச்சைக்காரன் சிரித்து விட்டான்!
இவர்கள்
நம்மளை விட பசி கொடுமையில் வாடுகிறார்கள் பாவம் !
இவர்களக்கும் நமக்கும் ஒரு வித்தியாசம்
நான் கை ஏந்தி பிச்சை கேட்கிறேன்
இவர்கள்
அதிகாரப் பிச்சை எடுக்கிறார்கள்
இவர்களின்
கௌரவப் பிச்சை விட
நம்ம
பிச்சை சால சிறந்தது
என்றுத் தனக்குள் பெருமைபட்டுக் கொண்டான்!