கவிதையின் பிறப்பிடம்

பாரதியும் தாசனும் கண்ட
கவிப் புரட்சியை

இன்றும் நாம் கற்றுத்
தெளிந்து புதியன படைத்து

வாழ்ந்துகொண்டும் அவர்கள்
கவிகளை உயிர்பெற்றுத் தந்து
கொண்டிருக்கின்றோம்.

கவிதைப் பிறப்பது
ஒரு கவிஞனுக்கு பெரும்
போராட்டமாகத் திகழும்.

உணர்ச்சிக்கும் கற்பனைக்கும்
நடக்கும் போராட்டமே

கவிதை பிறக்கிறது.
கவிஞன் தான் நினைத்த
அனைத்தையும் கற்பனைக்
காவியம் படைக்கின்றான்.

இன்றும் அதன் கண்ணியம்
மாறாமல் சிதைவுறாமல்
வாழ்ந்து கொண்டிருக்கிறது.

புதுமைகளிலும் புதுமைபடைத்து,
மலர்ச் சரத்தைத் தொடுத்து

மாலையாக அணிவித்து
வரவேற்று பெருமை
சேர்க்கிறது.

இப் பிறப்பினை கம்பளம் விரித்து
கொண்டாடுகிறார்கள்
கவிஞர்கள்.

கவிதை கவி அல்ல.
உணர்ச்சியின் முழக்கம்.
அதன் மலர்ச்சி

மல்லிகை வாசனையின்
மயக்கம்.

அதனை வசீகரித்து ,ஆராதிக்க
அதிகமாக நேசிக்கிறார்கள்.!

புதுமை படைப்பதில்
கவிஞர்கள் தன் சிறகை விரித்து

சிறப்பைச் சேர்த்து
கற்பனையில் மதிப்பைத் தந்து

மெருகூட்டி சபையினிலே
மலரச் செய்கிறார்கள்.!

வெள்ளி மாலையில்
முத்துக்களைப் பதித்து
வான் புகழும் பாராட்டைத தந்தது.!

சான்றோர்களுக்கெல்லாம்
குறுந்தொகை போலக்
காவியமாகக் காட்சி தருகிறது.!

தேடுவதைக் காட்டிலும்
தேடியது கிடைத்த மகிழ்ச்சியில்

கற்பனை,ரசனைகள் கலந்தே
வாசம் வீசிடும் அற்புதம் மிகுந்த
அதிசயம் நிகழ்த்தும்.!

தோண்டத் தோண்டக்
குறையாத தொட்டணை
தூறும் மணர் கேணி.!

எழுதியவர் : செயா ரெத்தினம் (7-May-12, 12:11 pm)
பார்வை : 216

மேலே