அன்புள்ள என் அம்மா அப்பா பெரியசாமி பரஞ்ஜோதி 555

அம்மா.....

கண்ணெதிரே நிற்கும்
தெய்வம் நீ...

பத்து மாதம் சுகமான சுமையாக
என்னை சுமந்தாய்...

உன் குருதியை பாலாக்கி
என் பசியை ஆற்றினாய்...

நீ விழித்திருந்து என்னை
உறங்க வைத்தாய்...

காலை நேர சூரியனையும்...

மாலை நேர குருவிகளையும்...

இரவு நேர நிலவையும் காட்டி
எனக்கு சோறூட்டினாய்...

என்னை பள்ளிக்கு அனுப்பும் போது
என் புத்தக சுமையை நீ சுமந்தாய்...

பருவ வயதில் எனக்கு
மணமுடித்து பார்க்க...

பல ஊர்களில் எனக்கு
வாழ்க்கை துணையை தேடினாய்...

தாய்க்குபின் தாரம் என்று
எனக்கு நீ சொல்லி கொடுதிருகிறாய்...

என் சோக சந்தோசங்களை
நீயே சுமந்தாய்...

கருவில் சுமந்தது போதாதெனில்...

எனக்கு நல்ல துணையை
தேடினாய்...

உனக்கு நல்ல மருமகளை
தேடவில்லை...

உன்னையும் அப்பாவையும்
தனிமை படுத்த...

அவள் நினைக்கிறாள்...

தாய்க்குபின் தாரம் என்று
பதில் சொன்னாய்...

நான் கேட்டதற்கு...

அம்மா என்னால் முடியவில்லை
முடிவு எடுபதற்கு...

எனக்கு உயிர் கொடுத்த நீங்களும்...

என் உயிர்க்கு உயிர்
கொடுக்கும் அவளும்...

நீங்கள் என் இரு கண்கள் போல...

நான் எந்த கண்களை குத்திக்கொள்ள...

உன் மழலைக்கு பதில் சொல்லமா.....?

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (7-May-12, 3:53 pm)
பார்வை : 432

மேலே