[228 ] இன்றைய குறள் -எனது பொருள் (001 )
குறள் : ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
....... ......வேந்தமை வில்லாத நாடு!......[74o:]
பொருள்:அன்புகுடி மக்கள்மீது ஆற்றாதார் ஆட்சியால்
.................துன்பமே ! மற்றெல்லாம் தூசு!
....
.................என்னிருந்தும் ஒன்றுமில்லை என்றறிக, தன்னரசன்
..................அன்பிலான் என்ற குடிக்கு!
குறள்: அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய
.............ஒண்பொருள் கொள்வார் பிறர்..... [1009 ]
பொருள் :தன்னை வருத்தித் தயைபிறர்க்கு மில்லாதான்
.................என்னைகொல் ஈட்டல் பொருள்?
..................தான்வருந்தி அன்பின்றித் தாங்கும் அறம்இன்றி
..................ஏன்பொருளை ஈட்டுவமோ இங்கு?
குறள் : நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
..............காதலர் இல்லா வழி! ......[1308 ]
பொருள்: வருந்துவதேன் இவ்வாறு தோழீ! வருத்தி
................. வழிசென்றார் இங்கில்லாப் போது?
.....
................வருந்திப் பயனுண்டோ வருத்திவழி சென்றார்
................இருந்துஅது கேட்கார் எனின்?
-௦-