கலைஞர் கருணாநிதியை பற்றி..

அறிஞர் அண்ணாவின் அன்பு தம்பி நீ,
தமிழகத்தின் தன்னிகரில்லா தலைவன் நீ..

உன் பார்வை பாரதத்தை வழி நடத்தும்,
உன் கவிப்பேச்சு எதிரிகளுக்கு கதிர்வீச்சு..

தமிழே உன் தாயானால் அதன்
தத்துப்பிள்ளை நீ ஆவாய்..

வள்ளுவனோ தமிழுக்கு சிறப்பு சேர்த்தான் அவன் அதிகாரத்தில்,
நீயோ வள்ளுவனுக்கே சிறப்பு சேர்த்தாய்
உன் அதிகாரத்தில்..

இலங்கையிலே காண வேண்டும் உடன்பிறப்புகளுக்கு தீர்வு,

அதுவரையிலே நீ அடைய மாட்டாய் உன் உறுதியிலே சோர்வு..

ஞாயிறு உதிக்கும் முன் விழிக்கும் சூரியனும் நீ,
இருளினை கலைக்க வந்த சந்திரனும் நீ..

நாவிருக்கும் வரை தூற்றுபவர்கள் தூற்றினாலும்,
நாமிருக்கும் வரை கறைபடியாது எங்கள் கலைஞருக்கு...

எழுதியவர் : மயிலை பிரபு (8-May-12, 6:38 pm)
பார்வை : 1815

மேலே