திருவினையாக்குபவன்...

நீ

அசாதரணமானவன்..

பாறையைப் பிளந்தும்..
மலைகளைக் கிழித்தும்

விருக்ஷமாகி விடுபவன்
வளர்வதற்காக.

உனது கனவுகள்
கனவுகளின் கனவுகள்.

வெறும் கால்களால்
நடந்து கொண்டே...
சிறகுகள் குறித்து
விரிகிறது
உனது சிந்தனைகள்.

எந்தக் களைப்புமின்றி...
உன் வாமனக் கால்களால்
அளந்து விடுகிறாய்
வானையும்

உனது விஸ்வரூபத்தை
வெளிக்காட்டாமல்.

எழுதியவர் : rameshalam (9-May-12, 12:49 pm)
சேர்த்தது : rameshalam
பார்வை : 140

மேலே