ஓர் திருநங்கை

கருவறையில் ஆணாய் மலர்ந்து,
ஹார்மோன்களின் மாற்றத்தால், பூமித்தாயின் மடியில், பெண்ணாய் பிறந்தோம்.
பூமித்தாயின் அரவணைப்பால் வளர்ந்தோம்.

கடவுளுக்கென பிறந்ததால்,
திருவாய் இருந்து ,
திருமதி ஆக,
திருநங்கை ஆனோம்.

என..,
கவிதையிலும்
கட்டுரையிலும்
புகழ்வதுண்டு

ஆனால்
காண்போர் எல்லோரும்
முகத்திற்கு நேராய் சிரிப்பதுண்டு
ஒற்றை இலக்கு என்னால் இகழ்வதுண்டு

தினமும் நரகத்தின் விழிகளில் விழித்து
இருதயமற்ற மனிதர்க்கிடையே வாழ்ந்து வருகிறோம்

மீண்டும் பிறந்த நான்
பூமித்தாயின் கருவிலேயே இருக்கிறேன்
ஆம்
ஒவ்வொரு நாலும் இருட்டறையில் தவிக்கிறேன்

நான் மனிதன் , நாங்களும் மனிதர்கள்,
என்ற நாள் வரும்
அன்று தான்
பூமித்தாயின் கருவில் இருந்து, எந்தன் ,
எங்கள் பாதம் தரையில் படும்

இப்படிக்கு

ஓர்
திருநங்கை

எழுதியவர் : validasan (9-May-12, 1:17 pm)
பார்வை : 217

மேலே