முத்தம் எத்தனை வகை

உன்னில் தான் எத்துனை வகைகள்

பால் மனம் மாறாத
பச்சிளம் குழந்தையின்
செங்கந்தால் இதழ்களில்
பவள முத்தமாய்!

கெஞ்சிக்கொஞ்சிக் கடைசியில் இறைஞ்சிக்
கேட்ட காதலியிடமிருந்து
திருட்டு முத்தமாய்!

பள்ளி செல்லும் மகனுக்கு உச்சி முகர்ந்து
தாய் தர
பாசமுதமாய்!

ஊடல் கொண்ட பொழுதுகளில் கழுத்தொரமாய்
காதலன் தர
சமாதான முத்தமாய்...

பிரியா விடை நேரங்களில் பத்தினி
நெற்றியில் தர
பிரிவு முத்தமாய்!

அப்பாவுடன் செல்லும் காதலியிடமிருந்து
பறக்கும் முத்தமாய்!

இதழ் மீது இதழ் பதிக்க இன்ப முத்தமாய்!

உலகின் பழமையான
உடற்பயிற்சி நீ....
உன்னால்
நரம்புகளில் பூ பூக்கும்
நெஞ்சுக்குள் பூகம்பம் நடக்கும்

இனிய தருணங்களின்
அஞ்சறைப்பெட்டி - நீ
எப்போதும் கிடைக்கும் அட்சைய பாத்திரம்!

பாசத்தின் வெளிப்பாடு - நீ
பல நாடுகளில் பண்பாடு

இலைமறை காய் அல்ல -நீ
இளமையின் திமிர்!

உலகமும், உயிரும், நாட்களும்
வாழ்வும், அன்பும், பரிவும்

உன்னில் தொடங்கி
உன்னிலே முடிகின்றன........

எழுதியவர் : சரவணா (9-May-12, 5:59 pm)
பார்வை : 471

மேலே