[231 ] நீதிக் குச்சி...

அந்தக் குச்சி
சாதாரணமானதுதான்
அப்படியொன்றும்
விசேஷமாகப் படைக்கப் பட்டதில்லை..
தண்டிக்க என்றே
நிறுத்திவைக்கப் பட்டதுபோல்
அது காட்சி அளிக்கிறது..
அது பார்த்தவைதான்..
எத்தனை வருத்தங்கள்,
துன்பங்கள், அழுகைகள்..
அடுத்தவர்களைத்
துன்புறுத்த,
வருத்த,
ஏன்
திருத்த,தண்டிக்கவே
தான் படைக்கப்பட்ட தாக
அதற்குள் ஒரு நினைப்பு..!
ஒவ்வொரு உபயோகத்தின் போதும்
அது தன்னை ஒரு
நியாயவானாக , நீதிபதியாகத்தான்
நினைத்துக்கொள்ளும்!
அதன் தோலே கூட
உரிந்துகொண்டிருந்தாலும்
அது கண்டு கொண்டது இல்லை!
தன்னை ஒரு எழுதுகோலாகக் கூடக்
கற்பனை செய்த பொழுது
தான் திருத்த வந்த
கோலென்ற அதன் எண்ணத்தை
அது கைவிடவில்லை!
தண்டிக்க வந்த அவதாரமாய்
தன் வேலையை
அது செய்து கொண்டிருக்கும் போதே
ஒருநாள் அது முறிந்து போகும்!
அப்பொழுதும் அது
உணர்ந்து கொள்ளாது
'தண்டிக்க வந்த தான்
தண்டிக்கப்பட்டோம்' என்பதை..
அன்று தெரியலாம்
உலகுக்கு
'யார் நியாயவான்'
'யார் நீதிபதி' என்பது..
-௦-

எழுதியவர் : எசேக்கியல்காளியப்பன் (10-May-12, 8:01 am)
பார்வை : 232

மேலே