திருப்புமுனை

படைத்து வைத்திருக்கிறாள்
பாரத மாத நம்மை ,
என்ன செய்திருக்கிறோம்
என்பதுதான் கேள்வி !

இந்தியா என்பதற்கு
எல்லைக்கோடுகள் தேவைதான் ,
மற்றவைகளுக்கு எதற்கு ,
மதத்தால் ,
மொழியால் ,
இனத்தால் !

ஓடும் ரத்தமும் ,
சுவாசிக்கும் காற்று ,
துடிக்கும் இதயம் ,
ஒன்றாய் இருக்கும் போது,
உனக்கென்ன கேடு !

மனிதத்தை கொள்ளும்
மதத்தை அழி ,
உருவம் இல்லாத
மதம் பேசும்போது ,
பேசுகின்ற நீ என்னை செய்கிறாய் ,
அன்பை போதித்த மதங்கள் இன்று
ஆளை கொள்ள காரணம் என்ன !

அடிப்படையை மறந்துவிட்டு
அலைமோதும் புரட்சி கூட்டம் ,
அகிம்சை வழியில் சுதந்திரம் பெற்றோம் ,
அதை ஆள்வதற்கு எத்தனை வன்முறைகள் ,
நமக்குள் இருக்கும் துரோகிகளை
நாமே காட்டி கொடுப்போம் ,
விரட்டி அடிப்போம் !

நாட்டை சுரண்டியை
வெள்ளையன் படைகளை விரட்டிவிட்டோம்
இன்று நம் வீட்டையும் சுரண்ட காத்துக்கிடக்கு
அரசியல் படைகள் ,
நாடியே விலைபேச என்தனை கட்சிகள் ,
பொதுநலம் பேசி சுயநலம் சாதிக்கும் ,
சுகவாசிக் கூட்டங்கள் ,
நன்றி கெட்ட நயவஞ்சகர்கள் !

சொல்ல சொல்ல ஆயிரம் வரும்
வெல்வதற்கு ஒன்றே வழி ,
பார் முனையை தேடும்
இளைஞர் கூட்டம் போர் முனையை தேடினால் ,
வஞ்சகம் வீழ்ந்து போகும் ,
மதங்கள் மறைந்து
மனிதாபிமானம் தோன்றும் ,
சுயநலம் ஒழிந்து
பொது நலம் கால் ஊன்றும்!

எழுதியவர் : வினாயகமுருகன் (10-May-12, 8:28 am)
பார்வை : 313

மேலே