அம்மா

அம்மா
கடவுளின் அவதாரம் !

நம் முன் நடமாடும்
உயிருள்ள தெய்வம் !

எல்லா ஜீவ ராசிக்கும்
உயிர் கொடுத்த உண்மை பரம் பொருள்!

நாம் உயிர் வாழ
நமக்கு உயிர் கொடுத்து காக்கின்ற மகமாயி!

நம்மை
எதிரியிடம் காப்பதில் இவள் பத்ரகாளி !

நம்
கல்வியின் சரஸ்வதி இவள் !

நம்
கலையின் வாணி இவள் !

நம்
வீரத்தின் பார்வதி இவள் !

நம்மை அரவணைப்பதில்
மாதாவின் சொருபமானவள்!

அவள்
அன்பின் அடையாளம்

அவள்
அன்பிற்கு நிகர் ஏது

இத்தனை
கடவுளின் உருவம் கொண்ட

நம் தாயே

நமக்கெல்லாம் கண் கண்ட தெய்வம்!

இவளை மறந்தால்
இனி
இந்த பூமி தாங்காது

எழுதியவர் : THILAKRAJ (10-May-12, 10:38 am)
Tanglish : amma
பார்வை : 266

மேலே