உதிரம் சொட்டும் உணர்வுகள்
உடலை விதையாக்கி
வியர்வையால் நீர் பாய்ச்சி
உலகம் செழிக்க உணர்வுகளால் உரமிட்டோம்.....
தூக்கத்தை மறந்து - துயரத்தில் புரண்டு
அழுக்குத் துணியால் எம்மை உடுத்தி
அகிலத்தை பொன் ஆடையால் அலங்கரித்தோம்....
எங்களுக்கு கண்ணீருக்கும் வியர் நீருக்கும்
வித்தியாசம் தெரியாது
இரண்டுமே எங்களோடுதான் என்றும் இணைந்து இருக்கும்
கரங்களில் செந்நீர் பாய்ந்தாலும்
இந்த உலகுக்காய் நாங்கள்
உழைத்துக் கொண்டுதான் இருப்போம்.....
பாரிட்கே ஒளிகொடுக்கும் எங்கள் வாழ்வு மட்டும்
ஏன்
என்றுமே இருட்டிலேயே......
ஆம்..... புறிகிது......
எங்கள் வாழ்வின் ஒளி அனைத்தையும்
எம் தலைவர்களே தம் கைகளால்
மறைத்துக்கொள்கிறார்களே.......
சற்று சிந்தியுங்கள்........
நாங்களும் உணர்வுகள் உள்ள மனிதர்கள்தான்...........
கருணையுடன்
-சியாத்-