விபச்சாரி !
விபச்சாரி !
நிரந்தர வீடு இல்லாமல்
தினம் தினம் இடம் மாறும் ,
சுகம் சுமந்த
சுமை தாங்கிகள் !
சமுதாய பார்வையில்
எங்களை ஒதுக்கிவைக்க சிலர் ,
ஓரப்பார்வையில் சிலர் ,
ஏற்றுக்கொள்ள பலர் !
இரவில் பிழைப்பு
பகலில் உறக்கம் ,
என்ன வித்தியாசமான் பொழப்பு !
இந்த இன்ப பூட்டுக்களை திறக்க
அறிமுகம் இல்லாத
ஆயிரம் கள்ள சாவிகள் !
மொட மொடக்கும் பணத்திற்கு ,
தினம் தினம் கசங்கிபோகிறோம் ,
எங்கள் காம கலசங்கள் !
விதியென்ற நூலில்
நாங்கள் விளையாட்டு பொம்மை ,
இந்த நூலின் பிடி ,
ஒவ்வொரு நாள் ஒருத்தன் கையில் !
மகளையும் மனைவியாக்கும்
மாபெரும் கொடுமை ,
பெற்றவன் தெரியாததால்
என் பிள்ளைக்கும் இதே நிலைமை !
அனலாய் ,
அருவியாய் ,
மழையாய் ,
எங்களில் கரைந்துபோகும் ,
முரட்டு சிங்கங்கள் ,
ஆடுபவர்களும் அடங்கி போகும்
இருட்டு மைதானம் !
அப்பனுக்கும் ,
மகனுக்கும் ,
மைத்துனனுக்கும் ,
வேறுபட்ட வேளைகளில் நானும்
ஓர்நாள் பொண்டாட்டி !
ஒருஜான் வயித்துக்கு ,
உடலை வைக்கிறேன் பணயமாய் ,
தினம் தினம் ,
அவன் பசி அப்போதே அடங்கும் ,
என் பசி காலையில்தான் !
அருவருப்பவர்களாய் தெரிந்தாலும்
நாங்களும் சுகத்தின் படைப்பாளிகள் !
இதமாய் இளைப்பாறிவிட்டு ,
ஒரு நாள் எங்கள் உடலையும்
காயப்படுத்தும் காவல் துறை கயவர்கள் ,
பிச்சையிலும் பங்கு கேட்கும் ,
இவர்களைகாடிலும்
நாங்கள் ஒருபடி மேல் !
இருட்டில் இதம்தேடி ,
வெளிச்சம் வந்தவுடன் வெளியில் ஓடும் ,
அரசியல் திருடர்கள் ,
அவர்களின் கறைபட்ட வேட்டிகள்
அங்கே கறைபட்ட நாட்களும் உண்டு !
முதலீடு இல்லாமல் ,
உடலைவைத்து தொழில் செய்யும் ,
சமுதாயத்தின் நம்பிக்கை துரோகிகள் ,
இது நாங்கள் தேடிய பாதை இல்லை !
உழைக்க சளைத்ததில்லை ,
வேலை கொடுக்க ஆளில்லை ,
படித்த தகுதிக்கு பதில்
உடற்தகுதியை பார்த்தவன் தான் ஓராயிரம் !
எங்கள் மென்மையை
பல சமயங்களில் வன்முறை
வென்று இருக்கிறது ,
கூச்சலிட்ட போதும் ,
கைகொடுக்க ஆல் இல்லை ,
கை பிடித்தவர்கள் தவிர !
தொடரும் -................