பாலைவனப் பறவை

விதியின் விந்தைக்குள்
நான் மட்டும் விதிவிலக்கல்ல
ஊரார் உறவுகளைப் பழிக்க
உறவுகள் எனை இகழ்ந்தது
நான் மட்டும் விட்டில் புச்சியாய்
என் ஊரையே நாடினேன்
ஆனாலும் தளும்புகள் ஏராளம் என்னுள்....
விடியல் தொடாத என் வாழ்வில்
விசித்திர தீபமேற்ற நினைத்தேன்
கண்களை மூடிக்கொண்டு
கனவுலகில் சஞ்சரித்தேன்
கற்பனைகள் தாராளம்.......
இதயச் சுமைகளையும்
நினைவுகளுடன் சங்கமித்த கனவுகளையும்
என்னுள் நிறைத்துக்கொண்டு
வெளிநாடு வந்தேன்.......!
வெறுச்சோடிப்போய் விட்டது என் வாழ்வு....
காசுக்காய் கண்களைப் பிடுங்கியதுபோல.....
ஒரு பிடிசோறு ஆகினும்
தன் பசி பாராமல்
என் பசியைப்போக்க காத்திருக்கும்
அன்னை எங்கே.....
உழைப்பில்லை என்றாலும் உனக்காக நான் உழைப்பேன்
என்று எனக்காக வாழும் தந்தை எங்கே.....
அழும்போது கண் துடைத்துவிட்ட தோழமை எங்கே......
இந்த பாலைவனத்தில் பட்டினியானாலும்
பக்கத்தில் நின்று ஆறுதல் செல்ல
நல்ல நண்பர்கள் இல்லையே.....
ஆனாலும்
என் நிலை தெரியாத எந்தையும் தாயும்
கண் காணா தேசத்தில்
என் மகன் நலமாக இருக்கிறான் என்று
தனக்குள் நினைத்துக்கொள்வார்களே
அது மட்டும்தான் நான் கொள்கின்ற சந்தோசம்.....
என் நிலையினை யாரிடம் சொல்லி நான் அழ.......
கருணையுடன்
-சியாத்-