கையளவு சாம்பல்
எந்தப் பறவை பறந்தாலும்
ஏற்கிறது வானம்,
எந்த சுரத்திலும் பிறக்கிறது
ஏழிசை கானம், ,
எந்த கைகள் யாசித்தாலும்
கொட்டுகிறது இயற்கை,
எந்த விழிகள் தொழுதாலும்
அன்பைத் தருகிறது மதங்கள்,
எந்த விரல் பட்டாலும்
பூக்கள் சிரிக்கின்றன,
எவர் நீர் ஊற்றினாலும்
உள்வாங்குகிறது வேர்,
எந்த கண்களுக்கும்
ஏழு நிறத்தை காட்டுகிறது
வானவில்,
எவர் கிழித்தாலும்
ஏழு நாட்களாய் உள்ளது
நாட்காட்டி,
எவர் நின்றாலும்
நிழல் அளிக்கிறது மரம்,
எவர் வீழ்ந்தாலும்
தாங்குகிறது பூமி,
பிறகென்ன --
ஆப்கானிஸ்தானும் தலிபானும்
அமெரிக்காவும் அல்கொய்தாவும்
இந்தியாவும் பாக்கிஸ்தானும்
மோடியும் கோத்ராவும்
சச்சினும் பால்த்காக்ரேவும்
மதுரை ஆதினமும் நித்தியும் .......
......முடிவில் ஒரு கையளவுச்சாம்பல்
சாம்பல் எதையும் ஏற்கிறது
எந்த காற்றும் நீரும்
l